Skip to main content

Posts

Showing posts from April, 2018

உலகம்

நல்ல உலகம் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறாயோ அந்த உலகம் உருவாகும் வரை முயற்சி செய்துகொண்டேயிரு. - உதயபிரகாஷ்

தேடுதல்

உள்ளம் ஒன்று சொல்லும்போது செவிக்குக் கேட்பதில்லை பள்ளம் ஒன்று இருக்கும்போது கண்கள் காண்பதில்லை அறிவைப் பலர் கற்பிக்கும்போது மூளை ஏற்பதில்லை அனைத்தும் இருந்தபோதும் எதுவும் தேடாமல் கிடைப்பதில்லை. - உதயபிரகாஷ்

நேசிக்க கற்றுக்கொள்

உலகத்தை நேசிக்க கற்றுக்கொள் உயிரினம் அனைத்தும் நேசிக்க கற்றுக்கொள் உலகில் வாழும் காலம் மிகக்குறுகியது என்ற உண்மை புரிந்துகொள் ! - உதயபிரகாஷ்

கடவுளுக்கு என்ன வேலை

மலையில்லையேல் மழையில்லை    மழையில்லையேல் ஆறில்லை       ஆறில்லையேல் நீரில்லை          நீரில்லையேல் வயலில்லை             வயலில்லையேல் உணவில்லை          உணவில்லையேல் வாழ்வில்லை       வாழ்வில்லையேல் உலகில்லை    உலகில்லையேல் பூமியில்லை பூமியில்லையேல் கடவுளுக்கு வேலையில்லை!!! - உதயபிரகாஷ்