Skip to main content

Posts

வேற்றுமையில்லா நாளொன்று

தேதியில்லா நாளொன்று கண்டேன் வேற்றுமையில்லா வாழ்வொன்று அன்று கேட்டேன் யாரோ ஒருவன் சொல்ல! - உதயபிரகாஷ்
Recent posts
அழுகை சில நேரம் இன்பத்தால் வரும் காற்றில் உங்கள் குரல் கேட்கும்போது - உதயபிரகாஷ்
உண்மை எதுவென தேடித்திரியும் மனம் சற்று அடங்கி நின்று பெறும் மூச்சிக்காற்றும் தெளிவைத் தருமே! - உதயபிரகாஷ் 

கடந்துசெல்லும் பாதை

கடந்துசெல்லும் பாதையில் நுண்ணுயிர்கள் இறப்பதஞ்சி பார்த்து பார்த்து நடந்தனர் - துறவிகள் அன்று விரைவாகக் கடக்க வயல்வெளியையும் இயற்கை கொடுத்த மலையையும் அழித்துவிட்டு பாதை போட துடிக்கின்றனர் - தீயோர் இன்று !! - உதயபிரகாஷ்

சூரியன்

யாரும் இல்லா வான்வெளியில் சுற்றித்திரியும் சூரியனே யாரை நீ தேடுகிறாய் கண்டவுடன் குளிர்வாயோ! - உதயபிரகாஷ்

காவலுக்கு இருப்பவன்...

காவலுக்கு இருப்பவன் சுட்டுக்கொல்ல நினைக்கிறான் தப்பியோடும் மக்களை துரத்தித்துரத்தி அடிக்கிறான் செய்வதேதும் அறியாமல் பார்த்துக்கொண்டு நிற்கிறோம் ஓட்டு போடும் நேரத்தில் கேள்வி கேட்க மறக்கிறோம் மறதியென்னும் ஆற்றினில் இதையும் கரைத்துவிடுவோமோ !! - உதயபிரகாஷ்